புதிய கொடியுடன் வேட்புமனு தாக்கல் செய்த தினகரன்

Report Print Kabilan in இந்தியா

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் சுயேட்சையாக போட்டியிடுவதைத் தொடர்ந்து, புதிய கொடியுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க சார்பில் மதுசூதனன், தி.மு.க சார்பில் மருது கணேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் தவிர டிடிவி தினகரனும் சுயேட்சையாக போட்டியிட உள்ளார். தண்டையார்பேட்டையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில், நவம்பர் 27ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் துவங்கியது.

இந்நிலையில், டிடிவி தினகரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய நேரம் கேட்டிருந்தார். அதன்படி 1 மணியளவில், தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் அலுவலகத்திற்கு வந்த தினகரன், தேர்தல் அதிகாரிகளிடம் வேட்பு மனுவை வழங்கினார்.

தினகரனின் ஆதரவாளர்கள் கையில், அ.தி.மு.க. கொடி போன்ற தோற்றத்தில் புதிய கொடி இருந்தது. அந்த கொடியில் கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணங்கள் இடம் பெற்று இருந்தன.

முன்னதாக இன்று காலை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்திய தினகரன், ‘எதிரிகளையும், துரோகிகளையும் வென்று இரட்டை இலையை மீட்டெடுப்போம்’ என தெரிவித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers