மனைவியை கொடூரமாக கொன்ற தொலைக்காட்சி பிரபலம்: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Report Print Arbin Arbin in இந்தியா

மனைவியை கொன்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முன்னாள் தொலைக்காட்சி தயாரிப்பாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து செசன்ஸ் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியில் செயல்பட்டுவரும் பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் சுஹைப் இல்யாசி.

கடந்த 2000ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கிழக்கு டெல்லியில் உள்ள சுஹைப் இல்யாசியின் வீட்டில் அவரது மனைவி அஞ்சு இல்யாசி கத்தி குத்து காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து நடத்தப்பட்ட பொலிஸ் விசாரணையில், தனக்கும் தன் மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது, இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார் என சுஹைப் விசாரணை அதிகாரிகளிடம் கூறினார்.

ஆனால், தனது மகளை சுஹைப்தான் கொன்று விட்டதாக அஞ்சுவின் தாயார் புகாரளித்தார். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சுஹைப்பை கைது செய்த பொலிசார் அவரை சிறையிலடைத்தனர்.

கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கின் விசாரணையில் அவரை குற்றவாளி என 14-ம் திகதி டெல்லி செசன்ஸ் நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில், அவருக்கான தண்டனை விபரங்கள் இன்று அறிவிக்கப்பட்டன. மனைவியை கொடுரமாக கொன்ற குற்றத்திற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

‘இந்தியாவின் மோஸ்ட் வாண்டட்’ என்ற பெயரில் 1998-ம் ஆண்டுகளில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. மிகுந்த பிரபலமடைந்த இந்த நிகழ்ச்சியை இயக்கி தயாரித்த சுஹைப் இல்யாசி என்பவர்தான் தற்போது ஆயுள் தண்டனை பெற்றுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers