அம்மாவை கழுத்தை நெரித்து கொன்ற 12 வயது மகள்: அதிர்ச்சி காரணம்

Report Print Raju Raju in இந்தியா
2003Shares
2003Shares
lankasrimarket.com

அம்மாவை கழுத்தை நெரித்து கொலை செய்த 12 வயது வளர்ப்பு மகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் பத்தீபூர் மாவட்டத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

பீர் முகமது மற்றும் கம்ரூல் நிஷா (45) தம்பதிக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லாத நிலையில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள்.

முகமது மும்பையில் வேலை செய்து வரும் நிலையில், நிஷாவும் அவரின் 12 வயது மகளும் பத்தீபூர் வீட்டில் வசித்து வந்தார்கள்.

மகள் இந்த வயதிலேயே ஆண் நண்பருடன் ஊர் சுற்றுவதை அறிந்த நிஷா அவரை தொடர்ந்து கண்டித்ததுடன் அவரை அடித்துள்ளார்.

இதனால் தாய் மீது ஆத்திரத்தில் இருந்த மகள், தன் ஆண் நண்பரை சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டுக்கு வரவழைத்து நிஷாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

அடுத்தநாள் காலை அக்கம்பக்கத்தினர் நிஷா குறித்து அவர் மகளிடம் கேட்டதற்கு அம்மா மருத்துவ சிகிச்சைக்காக வெளியூர் சென்றுள்ளதாக கூறியுள்ளார்.

ஆனால் அவர் மீது சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்து பொலிசார் பார்த்த போது நிஷா சடலமாக கிடந்துள்ளார். சடலத்தை கைப்பற்றிய பொலிசார் நிஷாவை கைது செய்தனர்.

பொலிசாரிடம் நிஷாவின் மகள் கூறுகையில், என் நடத்தையில் சந்தேகப்பட்டு என் தாய் எனக்கு விஷம் வைத்து கொல்ல முயன்றார்.

பல முறை மின்சார ஷாக் கொடுத்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் என் நண்பருடன் சேர்ந்து அம்மாவை கொன்றதாக கூறியுள்ளார்.

தவறான பாதையில் மகள் சென்றதால் நிஷா கண்டித்ததாகவும் அந்த கோபத்தில் தான் அவரை மகள் கொலை செய்துள்ளதாகவும் பொலிசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்