தீயில் கருகிய புதுமணத் தம்பதி: உறவினர்கள் கதறல்

Report Print Printha in இந்தியா
2040Shares
2040Shares
lankasrimarket.com

குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் புதுமண தம்பதிகள் சிக்கி உயிரிழந்தது அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் போடி அருகே உள்ள குரங்கணி மலைப் பகுதியில் நடந்த பயங்கர காட்டுத் தீ பரவியது.

அதில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற கல்லூரி மாணவிகள், சுற்றுலா பயணிகள் உட்பட, ஈரோட்டைச் சேர்ந்த புதுமணத் தம்பதி விவேக்- திவ்யா என்பவர்களும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

துபாயில் பணியாற்றி வரும் விவேக், மூன்று மாதங்களுக்கு முன்னர் கோபிசெட்டிப் பாளையத்தைச் சேர்ந்த திவ்யா என்பவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இவர் கடந்த மார்ச் 3-ம் திகதி அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், 100 days marriage celebration with ponsati #temple #DV" என்று பதிவிட்டிருந்தார். அதனுடன் கோவிலில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.

இதேபோல் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்த நிலையில், கடைசியாக வாரம் விடுமுறை முடிந்து விவேக் செல்லவிருப்பதால் புதுமணத் தம்பதி குரங்கணிக்கு வந்துள்ளனர்.

வந்த இடத்தில் இருவரும் தீயில் கருகி பரிதாபமாக பலியான சம்பவம் அவர்களின் உறவினர்கள் மத்தியில் பலத்தை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்