உயிர் காக்கும் கருவியை அகற்ற சொன்னேன்: கதறும் திவ்யாவின் தாய்

Report Print Fathima Fathima in இந்தியா

குரங்கணி தீ விபத்தில் பலியான புதுமண தம்பதி திவ்யா- விவேக்கின் மரணத்தால் அக்கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

ஒரே பள்ளியில் படித்த திவ்யாவும், விவேக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது, முதலில் எதிர்ப்பு தெரிவித்த இவர்களது குடும்பத்தார் காலப்போக்கில் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

விவேக் துபாயில் பணிபுரிய மூன்று மாதங்களுக்கு முன்பு இருவரின் திருமணம் கோலாகலமாக நடந்தது.

100வது நாள் கொண்டாட்ட நிகழ்வாக குரங்கணி சென்ற திவ்யா- விவேக் காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டனர்.

முதலில் விவேக் உயிரிழந்துவிட, மதுரை அரசு மருத்துவமனையில் 90 சதவிகித தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார் திவ்யா.

உயிருக்கு போராடும் மகளை பார்க்கமுடியாமல் கதறியுள்ளார் திவ்யாவின் தாய், இப்படி இருப்பதற்கு பதிலாக இறப்பதே மேல் என கருதியவர், உயிர் காக்கும் கருவிகளை அகற்றச் சொன்னாராம்.

நேற்று உயிரிழந்த திவ்யாவின் உடலை கண்ணீர் மல்க மதுரை மயானத்திலேயே அடக்கமும் செய்துள்ளனர்.

துபாய் செல்வதற்காக விசா, விமான டிக்கெட்டுகள் எல்லாம் எடுத்து தயார் நிலையில் இருக்க விதி விளையாடிவிட்டதே என கதறுகின்றனர் உறவினர்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்