புற்றுநோயால் உயிருக்கு போராடிய பெண்: மந்திரவாதியால் சிகிச்சை அளித்த மருத்துவர்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் பூனே நகரில் புற்றுநோயால் உயிருக்கு போராடிய நோயாளிக்கு மத்திரவாதியை அழைத்து வந்து சிகிச்சை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் மந்திரவாதி எலுமிச்சை பழத்தை வைத்து பூஜை மேற்கொள்வதும் அதை மருத்துவர் பார்த்துக் கொண்டே இருப்பதும் வீடியோவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பூனே நகரில் குடியிருக்கும் சந்தியா சோனாவானே(24) என்ற இளம்பெண் மார்பக புற்றுநோய் காரணமாக சதிஷ் சவான் என்ற மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் முதலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் காரணமாக குறித்த பெண்மணிக்கு அதிக உதிர போக்கு இருந்து வந்துள்ளது.

இதனிடையே மிகவும் ஆபத்தாக கட்டத்தில் இருந்த சந்தியாவுக்கு மேலும் ஒரு அறுவை சிகிச்சைக்கு மருத்துவர் சவான் பரிந்துரைத்துள்ளார்.

இதனிடையே, மந்திரவாதி ஒருவரை அழைத்து வந்த மருத்துவர் சவான், குற்றுயிராக கிடந்த நோயாளிக்கு பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

மட்டுமின்றி மந்திரவாதத்தால் புற்றுநோய் தீரும் எனவும் அந்த மருத்துவர் நோயாளியின் உறவினர்களிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில் உதிர போக்கு அதிகமாகவே, சந்தியா உயிரிழந்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

மட்டுமின்றி குறித்த மருத்துவர் மீதும் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம் மராட்டிய மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்