காதலியை காப்பாற்ற கொலைகாரனாக மாறிய காதலன்: கல்லூரி மாணவி திடுக் வாக்குமூலம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் காதலியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை காதலன் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவன் கார்த்திகேயன். இவன் கடந்த சில தினங்களுக்கு முன் வடசென்னிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அடிவார பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்தான்.

இது தொடர்பாக பொலிசார் விசாரனை மேற்கொண்டு வந்த நிலையில், இதில் கல்லூரி மாணவி ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. நானும் என்னுடைய கல்லூரியில் படித்து வரும் தமிழரசன் என்பவரும் காதலித்து வந்தோம்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நானும், தமிழரசனும் வடசென்னிமலை கோவிலுக்குச் சென்றிருந்தோம்.

அப்போது அங்கு வந்த கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர் மாரிமுத்து, எங்களை கத்தியை காட்டி மிரட்டியதுடன், என்னிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்தனர்.

இதனால் கோபப்பட்ட தமிழரசன், கார்த்திகேயனிடமிருருந்த கத்தியை பிடுங்கி அவரை குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலே இறந்தார்.

அவரது நண்பர் அங்கிருந்து அலறி அடித்து ஓடிவிட்டார் என்று மாணவி பொலிசாரிடம் கூறியுள்ளார்.

அதன் பின் கார்த்திகேயனின் கூட்டாளியான மாரிமுத்துவை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, வடசென்னிமலை கோவிலில் பல காதல் ஜோடிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் செல்போன் உள்ளிட்டவைகளை இவனும், கார்த்திகேயனும் சேர்ந்து செய்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்