கணவரின் ஆசைக்காக இளம்பெண்களை அனுப்பினேனா? கொந்தளித்த நடிகை

Report Print Arbin Arbin in இந்தியா

இளம்பெண்களை தனது கணவரின் படுக்கைக்கு அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து நடிகை ஜீவிதா விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை ஜீவிதா பல இளம் பெண்களை கட்டாயப்படுத்தி தனது கணவர் ராஜசேகரின் படுக்கைக்கு அனுப்பியதாக டிவி விவாத நிகழ்ச்சியில் தெரிவித்தார் சந்தியா.

இந்நிலையில் ஜீவிதா செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், சந்தியா கூறியதில் எதுவும் உண்மை இல்லை. சந்தியா தனது புகாரை நிரூபிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

சந்தியா மற்றும் அந்த விவாத நிகழ்ச்சியை நடத்திய டிவி சேனல் மீது அவதூறு வழக்கு தொடரப் போகிறேன்.

திரையுலக பிரபலங்கள் என்றால் மிகவும் கீழ்த்தரமானவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் சந்தியா.

யாரையும் கட்டாயப்படுத்தி படுக்கைக்கு அழைத்துச் செல்ல அவர்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல.

பல ஆண்டுகளாக அவரை ஏமாற்ற ஸ்ரீ ரெட்டி ஒன்றும் குழந்தை இல்லையே. அவருக்கு என்ன தேவை என்று தெரியவில்லை என்றார்.

மட்டுமின்றி செய்தியாளர்களிடம் தெரிவித்தது போன்றே ஜீவிதா காவல் நிலையத்திற்கு சென்று சந்தியா மற்றும் அந்த பிரபல டிவி சேனல் மீது புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்