மூஞ்சியிலே முழிக்காத என திட்டிய காதலி! ஆசிட் வீசிய காதலன்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் தன்னுடன் பேச மறுத்ததால் காதலி முகத்தில் ஆசிட் வீசிய காதலனால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் ஜிஷா ஷாஜி, 23 வயதான இவர் தற்போது ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

அங்கிருக்கும் ஹாஸ்டல் ஒன்றில் தங்கி வேலை பார்த்து வரும் இவருக்கும், கேரளாவைச் சேர்ந்த பிரமோத் என்பவரும் காதல் மலர்ந்துள்ளது. ஜிஷாவின் வீட்டின் அருகே தான் பிரமோத்தின் வீடு இருந்துள்ளது.

இந்நிலையில் இவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, ஜிஷா பிரமோத்துடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

இதனால் மிகவும் வருத்தமடைந்த பிரமோத் அவருடைய போனிற்கு தொடர்பு கொண்டுள்ளார்.

ஆனால் அவர் தொடர்ந்து போன் எடுக்காத காரணத்தினால், நேராக போய் பார்த்துவிடலாம் என்று கூறி ஐதராபாத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு சென்றவர் ஜிஷா எப்போது மருத்துவமனை செல்கிறார், அவர் வேலை நேரம் என்ன என்பதைத் தெரிந்துகொண்டுள்ளார்.

நேற்று மாலை ஜிஷா பணிமுடிந்து மருத்துவமனையில் இருந்து வெளியே வரும்போது பிரமோத் வழி மறித்துள்ளார்.

அப்போது ஜிஷா என்னை ஏன் இங்கு பார்க்க வந்த என்று கேட்ட போது, என்னுடன ஏன் பேச மாட்டிங்கிற என இருவருக்கும் வாக்குவாதம் வலுத்துள்ளது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஜிஷா, பிரமோத்திடம் ஏன் மூஞ்சியிலே முழிக்காத என்று கூற, உடனடியாக பிரமோத் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை அவரது மீது ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

இதில் ஜிஷா வலியில் துடிதுடிக்க, அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தப்பிய நபரை பொலிசார் தேடி வருவதாகவும் ஆசிட் வீச்சினால் பாதிப்புக்குள்ளான பெண்ணிற்கு 10 சதவீத காயங்கள் மட்டுமே எனவும் பயப்படும் படி ஒன்றும் இல்லை எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers