மகனை கொலை செய்தால் தலா 2 ஏக்கர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தில் எழுத்தாளர் சௌபா, தனது மகன் விபினை கொலை செய்ய உதவியவர்களுக்கு தலா 2 ஏக்கர் தர முன் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை மாவட்டம் எஸ்.எஸ்.காலனியில் வசித்து வந்தவர் சௌந்திரபாண்டியன். சௌபா என நண்பர்களால் அழைக்கப்படும் இவர், பிரபல எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார்.

இவரது மனைவி லதா பூரணம் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் நிலையில், இவர்களது மகன் விபின்(27) இருவரிடமும் தங்கி வந்துள்ளார்.

விபின் மது உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தனது நண்பர்களுக்கு பணத்தை செலவழிக்கும் விபின் தனது தந்தையிடம் அதிகம் பணத்தை கேட்டு பெற்றுள்ளார்.

இதன் காரணமாக, சௌபா தனது மகன் மீது கடும் அதிருப்தியில் இருந்துள்ளார். இந்நிலையில், விபின் தனது தந்தை வாங்கி கொடுத்த விலையுயர்ந்த காரை விற்றுள்ளார். இதனால் விபின் மீது சௌபாவிற்கு மேலும் கோபமடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் ஒரு வாரமாக விபின் காணாமல் போயுள்ளார். இதனை அறிந்த விபினின் தாய் லதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் பின்னர், பொலிசார் சௌபாவிடம் நடத்திய விசாரணையில், தனது மகன் தவறான பழக்கங்களுக்கு ஆளாகியதை தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும், அதனால் தான் அவரை கொலை செய்து புதைத்து விட்டதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், தன்னை தொந்தரவு செய்து வந்த விபினை கொலை செய்ய சௌபா தனது தோட்டத்து ஊழியர்களை அழைத்து புலம்பியுள்ளார்.

மேலும், ‘அவன் சொத்துக்காக என்னை கொலை செய்யவும் துணிந்து விட்டான். எனக்கு உதவுங்கள்’ எனக் கூறி அவர்களிடம் அழுதுள்ளார். அதன் பின்னர், தன் மகனை கொலை செய்தால் தலா 2 ஏக்கர் நிலம் எழுதிக் கொடுப்பதாகவும் சௌபா கூறியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers