ஆறுதல் கூறுவது எப்படி என விஜயிடம் இருந்து ரஜினி கற்க வேண்டும்: இயக்குனர் அமீர் விளாசல்

Report Print Raju Raju in இந்தியா

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர் விஜயிடமிருந்து, ரஜினி கற்றுக் கொள்ள வேண்டும் என இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மக்கள் போராடிய நிலையில் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.

இதில் பாதிக்கப்பட்ட மக்களை நடிகர் ரஜினிகாந்த் கடந்தவாரம் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

ரஜினிகாந்த் மன்ற நிர்வாகிகளிடம் புடைச்சூழ அங்கு சென்றார்.

இந்நிலையில் நடிகர் விஜய் நேற்று நள்ளிரவு தூத்துக்குடிக்கு சென்று உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதனிடையில் ரஜினி மற்றும் விஜய்யின் தூத்துக்குடி பயணம் குறித்து இயக்குனர் அமீர் பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர் விஜயிடமிருந்து, ரஜினி கற்றுக் கொள்ள வேண்டும் என ரஜினியை விமர்சித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers