துத்துக்குடியில் அத்துமீறிய பொலிஸார் மீது வழக்கு போடாதது ஏன்: கம்யூனிஸ்ட் தலைவர் ஆதங்கம்

Report Print Trinity in இந்தியா

தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பலியானார்கள். அதனை தொடர்ந்து அங்கு ராணுவ கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100வது நாள் அமைதி போராட்டத்தின் போது கலவரம் வெடித்ததை அடுத்து அங்கு துப்பாக்கி சூடு நடைபெற்றது. அது உலக அளவில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் பேரணி மற்றும் ஊர்வலம் நடத்த போவதாக அறிவித்தது. இதற்கு காவல்துறை சம்மதிக்காத நிலையில் உயர்நீதி மன்றம் நிபந்தனைகளோடு அனுமதித்தது.

இன்று திங்களன்று நடைபெற்ற பேரணிக்கு பிருந்தா காரத் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழுவோடு பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிருந்தா காரத் விசாரணை என்கிற பெயரில் சீருடை அணியாத காவலர்கள் நள்ளிரவில் வந்து தங்கள் வீடு ஆண்களை அழைத்து போவதாக அங்குள்ள கிராம மக்கள் கூறுவதையும் அதற்கு பயந்து பெண்கள் அனைவரும் கோயிலில் இரவு தங்குவதையும் குறிப்பிட்டு

இரவு நேரங்களில் பொதுமக்களை கைது செய்ய காவல்துறைக்கு யார் அனுமதி கொடுத்தது ? அப்பாவி மக்களை இப்படி அனுமதியின்றி அழைத்து செல்லபடுகிறார்கள். ஆனால் அராஜகமாக செயல்படும் போலீசார் மீது ஒரு வழக்கு கூட போடப்படாதது ஏன் என்கிற கேள்வியை எழுப்பினார்.

அதன்பின் கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிருந்தா காரத் துப்பாக்கி சூட்டிற்கு பலியானவர்களுக்காக உணர்ச்சிமிக்க உரையாற்றினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers