நாட்டிற்கு பெருமை சேர்த்த வீராங்கனையை அசிங்கப்படுத்திய இந்தியர்கள்!

Report Print Vijay Amburore in இந்தியா

உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் தங்கம் வென்று இந்திய நாட்டிற்கே பெருமை சேர்த்த ஹிமா தாஸை, கூகுளில் தேடும் விதத்தில் இந்தியர்கள் அசிங்கப்படுத்தியுள்ளனர்.

நாகோன் மாவட்டத்தில் உள்ள திங் கிராமத்தை சேர்ந்தவர் ஹிமா தாஸ். ஏழை விவசாயியின் மகளான ஹிமா, பின்லாந்தின் நடைபெற்ற இருபது வயதுக்குப்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டியில், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று இந்திய நாட்டிற்கே பெருமை சேர்த்தார்.

அவரது வெற்றி குறித்து பலரும் பாராட்டி வரும் வேளையில், அவரை பற்றி அறிந்து கொள்ள யாரேனும் கூகுள் தேடு பொருளில் பெயரை பதிவிட்டால், ஹிமா எந்த சாதியை சேர்ந்தவர் என்பதை தான் அதிகமாக இந்தியர்கள் தேடியுள்ளனர்.

இதனால், வெளிநாட்டினர் மத்தியில் இந்தியாவின் மானம் தற்போது தான் பறிபோகிறது என யாரும் என்ன வேண்டாம். இதற்கு முன்னதாக ஒலிம்பிக் போட்டியில் பிவி சிந்து பதக்கம் வென்ற சமயத்திலும், இதே வேலையை தான் இந்தியர்கள் செய்திருந்தனர்.

நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக பதக்கம் வாங்கி வரும் வீரர்களை பாராட்டுவதற்கு கூட சாதி பார்ப்பது, அந்த வீரர்களையே அசிங்கப்படுத்துவதற்கு சமம் என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்