ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் கொன்று புதைப்பா? கேரளா வழக்கில் திடுக்கிடும் திருப்பங்கள்

Report Print Fathima Fathima in இந்தியா

கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் இருவரை கைது செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவின் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவை அடுத்துள்ள வண்ணப்புரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 62 வயதான இவருக்கு 53 வயதில் சுசீலா என்ற மனைவி இருந்தார்.

இந்த தம்பதிக்கு 20 வயதில் ஆர்ஷா என்ற மகளும் 17 வயதில் ஆதர்ஸ் என்ற மகனும் இருந்தனர், கடந்த 2 நாட்களாக கிருஷ்ணனின் வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்துள்ளது.

சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிசுக்கு தகவல் அளிக்க, விரைந்து வந்த அதிகாரிகள் சோதனை செய்தததில் அதே வீட்டுக்கு நால்வரும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர்.

இச்சம்பவம் கேரளா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், வீட்டிலிருந்த நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்துள்ளது.

அத்துடன் அவர்களது வீட்டிலிருந்து தற்காப்புக்கான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன, யாராவது தொடர்ந்து அச்சுறுத்தி வந்தார்களா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

மேலும் நான்கு செல்போன்கள் கைப்பற்றப்பட்டதில், ஒரே செல்போன் எண் மட்டுமே கடந்த ஒருமாதமாக புழக்கத்தில் இருந்தது தெரியவந்துள்ளது.

மற்ற போன்களை பயன்படுத்தாதது ஏன் என்ற குழப்பமும் நிலவுகிறது, இந்நிலையில் சம்பவ தினத்தன்று வெள்ளை நிற கார் ஒன்று வீட்டுக்கு வெளியே நின்றிருந்ததை அக்கம்பக்கத்தினர் பார்த்ததாக கூறியுள்ளனர்.

எனினும் இவர்களது வீட்டிற்கு அடிக்கடி வெளி ஆட்கள் வந்து செல்வது வழக்கம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் 40 பேரிடம் விசாரணை நடத்திய பொலிசார் இருவரை கைது செய்துள்ளனர், 15 பேரை சந்தேக வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதற்கிடையே கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அரசியல் பணிகளில் இருந்து கிருஷ்ணன் விலகி இருந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் கிருஷ்ணன் மாய மந்திரம், சூனியம் வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பொலிசில் புகார் அளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்