நடிகர் சிம்புவின் கன்னத்தில் அறைந்த கருணாநிதி

Report Print Deepthi Deepthi in இந்தியா
493Shares
493Shares
lankasrimarket.com

திமுக தலைவர் கருணாநிதியுடன் தனது உறவு குறித்து நடிகர் சிம்பு மனம் திறந்துள்ளார்.

நான் சிறுவயதில் இருந்தே கருணாநிதி தாத்தாவுடன் நன்றாக பேசுவேன். எனக்கு பிரச்சனைகள் இருக்கும்போது எனது தந்தையிடம் உதவி கேட்பதை விட கருணாநிதி தாத்தாவிடம் உதவி கேட்டுள்ளேன்.

அவர் அதனை 10 நிமிடத்தில் முடித்துக்கொடுத்துள்ளார். அவரை சந்தித்து பேசும்போது பலமுறை சிறுவயதில் அவரது பேனாக்களை திருடியுள்ளேன்.

நான் நடிக்கும் படங்கள் குறித்து அவ்வப்போது என்னிடம் கேட்டு தெரிந்துகொள்வார். நான் படம் இயக்கியபோது அதனை தனக்கு போட்டு காட்டுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார்.

ஆனால், ஒரு சில காரணங்களால் அது முடியவில்லை. வல்லவன் படம் முடிந்த பிறகு அவரை ஒருமுறை சந்தித்தபோது, என்னை கன்னத்தல் அறைந்தார். எதுக்காக எனக்கு உனது திரைப்படத்தை போட்டு காட்டவில்லை, இனியும் அப்படி செய்தால் மறுபடியும் மற்றொரு கன்னத்தில் அறைவேன் என கூறினார்.

அவர் மிகப்பெரிய அரசியல்வாதியாக இருந்தாலும், மற்றவர்களின் தொழில்குறித்து தெரிந்து வைப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்