கேரள பெருவெள்ளம்: மக்களுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் விடுத்த உருக்கமான கோரிக்கை

Report Print Arbin Arbin in இந்தியா

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு ஒருமாத ஊதியத்தை நிவாரண நிதியாக கொடுங்கள் என பினராயி விஜயன் அம்மாநில மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் ஏற்பட்ட அழிவினால் கேரளா பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகிறது.

மாநிலத்திற்கு ரூ. 30 ஆயிரம் கோடி வரையில் இழப்பு நேரிட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தை கட்டமைக்க பல்வேறு தரப்பில் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முதலமைச்சர் பினராயி விஜயன், மாநிலத்தில் மழை குறைந்து, வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது.

முகாம்களில் தங்கி இருக்கும் மக்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். இன்னும் 1,465 நிவாரண முகாம்களில் 4.62 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள்.

இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சுத்தம் செய்து தரப்பட்டுள்ளன. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட வசதிகளை மீண்டும் மேம்படுத்த ஏராளமான நிதி தேவைப்படுகிறது.

மாநிலத்தின் மறுக்கட்டமைப்பாக கேரளாவில் வாழும் மக்களும், வெளிநாடுகளில் வாழும் கேரள மக்களும் தங்களின் ஒருமாத ஊதியத்தை மாநிலத்தின் மேம்பாட்டுக்காக அளிக்க வேண்டும்.

அனைத்து மக்களாலும் ஒரு மாத ஊதியத்தை அளிப்பது என்பது கடினமானது. கேரளாவில் வசிக்கும் மக்களும், வெளிநாட்டில் வசிப்பவர்களும் ஒவ்வொரு மாதத்தில் 3 நாட்கள் ஊதியத்தை மாநிலத்தின் மறுகட்டமைப்புக்காக அளிக்கலாம் என உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...