பாலியல் புகார் கூறிய நடிகையிடம் அர்ஜூன் எத்தனை கோடி நஷ்ட ஈடு கேட்டார் தெரியுமா?

Report Print Deepthi Deepthi in இந்தியா

#MeToo வாயிலாக சுருதி ஹரிகரன், நானும் அர்ஜூனும் ‘நிபுணன்’ படத்தில் ஜோடியாக நடித்தபோது, ஒரு பாடல் காட்சியில் அர்ஜூன் வேண்டும் என்றே என்னை பலமுறை கட்டிப்பிடித்தார், இறுக்கமாக அணைத்தார் என புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், தன் மீது பாலியல் புகார் சுமத்திய நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது, நடிகர் அர்ஜுன் ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அர்ஜுன் சார்பாக அவரது உறவினரும் கன்னட நடிகருமான துருவா சார்ஜா பெங்களூர் சிவில் நிதிமன்றத்தில், இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

இதனால், கன்னட திரைப்பட சங்கம், இந்த பிரச்சனை குறித்து அர்ஜுன் மற்றும் ஸ்ருதி ஹரிஹரன் தரப்பு கலந்துரையாட ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இரு தரப்பினரும் கலந்துகொள்ளாத காரணத்தால் சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers