கணவன் மற்றும் இரண்டாவது மனைவி மீது பொறாமையால் முதல் மனைவி செய்த செயல்! நேர்ந்த விபரீத சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் கணவனையும் அவரது இரண்டாவது மனைவியையும், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த பெண்ணை பொலிசார் தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் அங்கநாதவலசை கிராமத்தை சேர்ந்த சண்முகத்தின் மனைவி கலாவுக்கு, 2 ஆண்டுகளுக்கு முன் ஏகாம்பரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை கணவன் கண்டித்ததால், ஏகாம்பரத்துடன் கலா சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, சண்முகம், கணவரால் கைவிடப்பட்ட, 3 வயது பெண் குழந்தையுடன் இருந்த சுஜாதா என்ற பெண்ணை மறுமணம் செய்து அவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இதன் பிறகு முதல் மனைவி கலா, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பஞ்சாயத்துதார் முன்னிலையில் தன் கணவருடனேயே வாழ்வதாகக் கூறி திரும்ப வந்துள்ளார். சண்முகம் ஒரே வீட்டில் இரண்டு மனைவி மற்றும் பிள்ளைகளோடு வாழ்ந்து வந்துள்ளார்.

ஆனால் சுஜாதாவும் சண்முகமும் ஜோடியாக சென்று வருவதை கண்டு ஆத்திரமடைந்த கலா தனது கள்ளக்காதலன் ஏகாம்பரத்திடம் கூறி அவர்களை தீர்த்துக்கட்ட திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

நேற்று நள்ளிரவில் ஏகாம்பரம் மற்றும் அவனது கூட்டாளியை வீட்டிற்கு வரவழைத்து, அறையில் தூங்கிக்கொண்டிருந்த சண்முகத்தையும் சுஜாதாவையும் இரும்பு ராடால் தலையில் சரமாரியாக அடித்ததாகக் கூறப்படுகிறது.

இதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சண்முகமும், சுஜாதாவும் துடிதுடித்து இறந்துள்ளனர். சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்து உறவினர்கள் ஓடிவந்ததை அடுத்து, கலாவும் ஏகாம்பரமும் தப்பியோடிவிட்டதாக சொல்லப்படுகிறது.

அவர்களுடன் வந்த ஏழுமலை என்பவனை பிடித்து அப்பகுதி மக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். தகவலறிந்து வந்த பொலிசார் ஏழுமலையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். தப்பியோடிய கலா மற்றும் ஏகாம்பரத்தை தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers