ராணுவ வீரரின் உடலுக்கு முன் நின்று செல்பி எடுத்த அமைச்சர்: வசைபாடும் இணையதளவாசிகள்

Report Print Vijay Amburore in இந்தியா

தற்கொலை படை தாக்குதலால் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் உடலுக்கு முன் செல்பி எடுத்த பாஜக அமைச்சரை இணையதளவாசிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் திகதி அன்று, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த அடில் அகமது என்னும் நபர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இந்த சம்பவமானது ஒட்டுமொத்த இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியது. மரணமடைந்த ராணுவ வீரர்களை அனைவரின் உடல்களும் சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்பட்டு அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தாக்குதலின் போது மரணமடைந்த கேரளாவை சேர்ந்த வசந்தகுமார் என்கிற வீரருக்கு நேற்று இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது அஞ்சலி செலுத்திய மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தனம், வீரரின் உடலுக்கு முன் செல்பி எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த இணையதளவாசிகள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்ததை அடுத்து, அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவை நீக்கியுள்ளார்.

அதேசமயம் தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றத்திற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers