கடைசி மூச்சுவரை உன்னை காதலிப்பேன்...ஐ லவ் யூ: நெஞ்சை கரைய வைக்கும் இறந்துபோன வீரரின் மனைவி எழுதிய கவிதை

Report Print Deepthi Deepthi in இந்தியா

புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14 ஆம் தேதி ஜெய்ஷ் இ முகமது அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் இந்த தாக்குதலில் பலியான விபுதி சங்கர் தவுன்டியாலின் மனைவி நிகிதா, தனது கணவர் விபுதி சங்கருக்காக கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

மனதை கரைக்கும் அந்த கவிதை தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

என்னிடம் பொய்யுரைத்துவிட்டாய்
'நிகிதா உன்னைக் காதலிக்கிறேன்' என..
சொல்லப்போனால் என்னைவிட
நீ அதிகம் காதலித்தது நாட்டைத்தான்...
எனக்கு பொறாமையாகத்தான் இருக்கிறது
ஆனால் ஒன்றும் செய்யமுடியவில்லை..
மக்களுக்காகவே உன் வாழ்க்கையை
தியாகம் செய்துவிட்டாய்..!
உறுதியான இதயம் கொண்டவன் நீ..
உன்னை என் கணவனாக பெற்றதில்
பெருமை எனக்கு..
நீ என்னை விட்டுச் சென்றது
அத்தனை வலிக்கிறது..
ஆனால் எனக்குத் தெரியும்
இறுதி வரை என்னுடன்தான் இருப்பாய்..
என் கடைசி மூச்சு வரை
உன்னை காதலித்துக்கொண்டே இருப்பேன்..
ஐ லவ் யூ விபு!

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers