தந்தை இல்லை......கைவிட்ட அண்ணன்: கனவுகளுடன் திருமண வாழ்க்கையில் சென்ற புதுப்பெண் எடுத்த சோக முடிவு

Report Print Deepthi Deepthi in இந்தியா

பஞ்சாப் மாநிலத்தில் திருணமான 2 மாதத்தில் புதுப்பெண் ஒருவர் தனது தாயுடன் இணைந்து உயிரை மாய்த்துக்கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்ரிதா கவுர் என்ற பெண்மணிக்கு ஹர்ப்ரித் சிங்குடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அம்ரிதாவுக்கு ஒரு அண்ணன் மட்டுமே உள்ளார். பெரும் சிரமத்திற்கு மத்தியில் அம்ரிதாவுக்கு அவரது தாய் திருமணம் செய்து வைத்துள்ளார்.

கனவுகளுடன் திருமண வாழ்க்கையில் நுழைந்த அம்ரிதாவுக்கு பேரடி காத்திருந்தது. திருமணம் ஆன நாள் முதல் கணவர் தனது மாமியார் மற்றும் சகோதருடன் இணைந்து பணம் மற்றும் நகைகள் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது தாய் மற்றும் அண்ணனிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அண்ணன் எதுவும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். தாய் மட்டுமே சமாதானம் செய்து வைத்துள்ளார்.

இருப்பினும் கணவர் வீட்டில் இருந்து தொடர்ந்து தொல்லை அதிகரித்துக்கொண்டிருக்கவே, தாங்க முடியாத அம்ரிதா மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். தனது மகளின் இறப்பை தாங்கிகொள்ள முடியாத தாயும் மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

தற்போது, இந்த சம்பவம் தொடர்பாக அம்ரிதாவின் கணவர் கைது செய்யப்பட்டு அவர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்