மக்களே ஆதரியுங்கள்: மேடையிலேயே கண்ணீர் விட்டழுத முன்னாள் பிரதமரின் குடும்பம்

Report Print Fathima Fathima in இந்தியா

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தனக்கு வழங்கிய ஆதரவை போன்று, தன்னுடைய பேரனுக்கும் வழங்க வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் தேவகவுடாவின் மஜத கட்சி 8 இடங்களில் போட்டியிடுகிறது.

இதில் வழமையாக தேவகவுடா போட்டியிடும் ஹாசன் தொகுதியில் அவரது பேரன் ப்ரஜ்வல் ரேவண்ணாவும், மண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமியும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் ஹாசன் தொகுதியில் பேரனை அறிமுகப்படுத்தும் விழாவின் போது பேசிய தேவகவுடா, என்னுடைய இளமை காலம் முதல் ஹாசன் தொகுதி மக்கள் என்னை ஆதரித்தனர்.

தற்போது வயதாகிவிட்டதால் ஓய்வு பெற இருக்கிறேன், எனக்கு பதிலாக என் பேரனுக்கு ஆதரவை வழங்குங்கள்.

தொகுதி மக்களுக்காக 24 மணிநேரமும் அவன் பாடுபடுகிறான் என கூறியவாறு கண்ணீர் விட்டார்.

இதை பார்த்த அவரது மகன் ரேவண்ணா மற்றும் வேட்பாளர் ப்ரஜ்வல் ரேவண்ணாவும் கண்ணீர் விட்டு அழுததால் சிறிது நேரம் பரபரப்பானது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்