நாடாளுமன்ற தேர்தலில் வன்முறை.. அடித்து நொறுக்கப்பட்ட வாகனங்கள்!

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தில் நடந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் பல இடங்களில் பயங்கர வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்தியாவில் 7வது மற்றும் இறுதிகட்ட நாடாளுமன்ற தேர்தல் நடந்து வருகிறது. இன்று 59 தொகுதிகளில் தேர்தல் நடந்து வருகிறது. இதில் மேற்கு வங்க மாநிலத்தில் மீதமுள்ள 9 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அம்மாநிலத்தில் இந்த முறையும் பயங்கர வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பல இடங்களில் பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளின் தொண்டர்கள் மோதி வருவதாக கூறப்படுகிறது.

மதுராபூரில் பா.ஜ.க வேட்பாளர் ஒருவர் தாக்கப்பட்டார். அவருடன் சென்ற வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் சில வேட்பாளர்களின் வாகனங்களும் தாக்கப்பட்டன.

இதுபோலவே சில வாக்குச்சாவடியில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் பா.ஜ.க அலுவலகம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. வன்முறைச் சம்பவங்கள் நடப்பதைத் தொடர்ந்து அங்கு கூடுதல் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers