லண்டனுக்கு பைக்கில் செல்லும் 3 பெண்கள்: கவனத்தை ஈர்க்கும் புகைப்படம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 3 பெண்கள் 25 நாடுகளுக்கு பைக்கிலேயே பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத்தை சேர்ந்த சரிதா மேத்தா, ஜினால் ஷா மற்றும் ருதாலி படேல் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் லண்டனுக்கு செல்லவிருக்கின்றனர்.

இந்த பயணத்தின் போது நேபாளம், பூடான், மியான்மர், சீனா உள்பட 25 நாடுகளை கடந்து லண்டனுக்கு செல்ல இருக்கின்றனர்.

ஜூன் 5 ஆம் திகதி வாரணாசியில் இருந்து தொடங்கும் இந்த பெண்களின் பயணத்தை உத்தரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் கொடி அசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.

பைக்கிங் குயின்ஸ் என்ற குழுவை சேர்ந்த இவர்கள் பெண்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் இந்த பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்