கரும்பு தோட்டத்தில் சீரழிக்கப்பட்ட பெண்கள்! 100க்கும் மேற்பட்ட வீடியோ.. பகீர் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் கரும்பு தோட்டத்தில் பல பெண்களை ஒரு கும்பல் மிரட்டி சீரழித்ததோடு இது தொடர்பான நூற்றுக்கும் அதிகமான ஆபாச வீடியோக்கள் சிக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களை ஒரு கும்பல பல ஆண்டுகளாக சீரழித்து வந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதே போன்ற மற்றொரு சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அதாவது அரசு கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவிக்கு பைனான்சியர் ராஜா, அவரது நண்பர் வேலுமணி ஆகியோர் வலை விரித்துள்ளனர்.

செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து வைத்துக் கொண்டு, இந்த பெண் பின்னாடியே சென்று தொந்தரவு செய்துள்ளனர்.

இதனால் பயந்து போன அப்பெண் இது குறித்து பெற்றோர் உதவியுடன் பொலிசில் புகார் அளித்தார்.

இதையடுத்து இருவரையும் பொலிசார் கைது செய்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

இது மொத்தம் 4 பேர் கொண்ட கும்பல் என்று கூறப்படுகிறது. இவர்களின் குறி பள்ளி, கல்லூரி மாணவிகள் தான்.

இதில் முக்கிய குற்றவாளி ராஜா தான். இவர்கள் குள்ளக்கருப்பன் கோயில் பின்புற பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்துக்கு வரும் காதல் ஜோடிகளின் லீலைகளை மறைந்திருந்து வீடியோ எடுத்து கொள்வார்களாம்.

அதன்பிறகு இந்த 4 பேரில் ஒருவரான ராஜா, அந்த ஜோடியிடம் சென்று தன்னை காவலர் என்று அறிமுகப்படுத்திவிட்டு அவர்களை மிரட்டி வந்துள்ளார்.

இதில் பயந்து நடுங்கும் பெண்களை கரும்பு தோட்டத்தில் வைத்து மிரட்டி சீரழித்து, அதையும் வீடியோவாக எடுத்து கொள்வது நடந்து வந்திருக்கிறது.

இப்படி 100-க்கும் அதிகமான வீடியோக்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில் மேலும் நடத்தப்படும் விசாரணையில் பல பகீர் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers