விஜயகாந்தின் கோடிக்கணக்கான சொத்துக்கள் ஏலம்! வெளியான அதிரடி அறிவிப்பு

Report Print Raju Raju in இந்தியா

கடன் பாக்கி தொகைக்காக நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் சொத்துக்கள் ஏலத்தில் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்டுள்ள ஏல அறிவிப்பில் ரூ.5,52,73,825 கடன் பாக்கிக்காக விஜயகாந்தின் சொத்துகள் ஏலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது விஜயகாந்த் நடத்தும் ஆண்டாள் அழகர் கல்லூரியின் அறக்கட்டளைக்கு கடனாக பெற்ற தொகைக்கு சொத்துக்கள் அடமானம் வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரி, சாலிகிராமம் வீடு, வேதவள்ளி தெருவில் உள்ள விஜயகாந்துக்கு சொந்தமான சொத்துக்கள் ஆகியவை ஏலத்தில் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் திரையுலகிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்