பல கோடிகளுடன் வெளிநாட்டுக்கு தப்பிய மன்சூர்கான்..அடுத்தடுத்து வெளியான தகவல்

Report Print Raju Raju in இந்தியா

ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் பணத்தை வசூலித்து வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற நிதி நிறுவன அதிபர் மன்சூர்கானுடன் தொடர்புடைய பெரும் புள்ளிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஐஎம்ஏ என்ற பெயரில் தங்க நகைகள் மற்றும் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தவர் மன்சூர்கான்.

இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆயிரக்கணக்கான இஸ்லாமிய முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் பணத்தை வசூலித்து வெளிநாட்டிற்கு தப்பி சென்றார்.

இதையடுத்து அவரின் 209 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகள், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மன்சூர்கானுடன் தொடர்புடைய அரசியல் கட்சித் தலைவர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அந்தவகையில் மன்சூர் கானுக்கு நெருக்கமாக விளங்கிய கர்நாடக அமைச்சர் ஜமீர் அகமது கான் ஜூலை 5ம் திகதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் தனக்கும் மன்சூர் கானுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று அமைச்சர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்