சரவண பவன் ராஜகோபாலை இடமாற்றுவதில் இருந்த சிக்கல்.. யார் பொறுப்பேற்றது?

Report Print Kabilan in இந்தியா

சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு இடமாற்றுவது சிக்கலானது என ஸ்டான்லி மருத்துவமனை கூறியபோது, அதற்கு அவரது மகன் தரப்பு முழு பொறுப்பேற்பதாக கூறியதாக தெரியவந்துள்ளது.

ஜீவஜோதி கணவர் பிரான்சிஸ் சாந்தகுமாரை கொலை செய்த வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார்.

இந்நிலையில், அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு மாற்றுவதில் சிக்கல் இருந்ததாகவும், ஆனால் அதற்கு அவரது மகன் முழு பொறுப்பேற்று இடமாற்றம் செய்ததாகவும் தெரிய வந்துள்ளது.

ராஜகோபாலை இடமாற்றுவது சிக்கலானது என ஸ்டான்லி மருத்துவமனை அறிக்கை விடுத்துள்ளது. அதற்கு முழு பொறுப்பேற்பதாக அவரது மகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிசார் பாதுகாப்புடன் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தான் அவர் மரணமடைந்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்