15 வயது சிறுமியை மணந்து ரகசியமாக வாழ்ந்து வந்த அஜித்குமார்... குழந்தை இருப்பதும் அம்பலம்

Report Print Raju Raju in இந்தியா
437Shares

தமிழகத்தில் 15 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்து குழந்தை பெற செய்த இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் அஜித்குமார் (20). இவர் கடந்த 2016ல் 15 சிறுமியை காதலிப்பதாக சொல்லி பழகி உள்ளார்.

அந்த பெண் அஜித்குமார் மீது அதிக நம்பிக்கை வைக்கவும், அதையே சாக்காக வைத்து கடத்தி கொண்டு போய்விட்டார்.

இதையடுத்து மகளை காணவில்லை என்று பெற்றோர் பொலிசில் புகார் தந்து இறுதியில் மீட்டனர்.

ஆனால் அஜித்குமார் மீண்டும் அதே சிறுமியை கடத்தி கொண்டு போய் திருமணமும் செய்து கொண்டு, குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இதில் சிறுமி கர்ப்பமாகி, இப்போது 5 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. இதோடு சிறுமியை தினந்தோறும் அடித்து கொடுமைப்படுத்தியும் வந்திருக்கிறார்.

ஒருகட்டத்தில் இதையெல்லாம் பொறுக்க முடியாத சிறுமி அங்கிருந்து தப்பி, திடீரென கைக்குழந்தையை தூக்கி கொண்டு பெற்றோர் வீட்டுக்குள் தஞ்சம் அடைந்தாள்.

நடந்த விடயங்களை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து பொலிசில் புகார் அளித்தனர்.

இதை தொடர்ந்து பொலிசார் அஜித்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்