மர்மமாக இருந்த மொடல் அழகியின் கொலை - சிக்கிய சாரதி

Report Print Abisha in இந்தியா

பெங்களுர் விமான நிலையத்தின் பின்புறத்தில் சடலமாக மீட்கப்பட்ட மொடல் அழகியின், இறப்பிற்கு யார் காரணம் என்பது குறித்து தெரியவந்துள்ளது.

பெங்களுர் விமான நிலையத்தின் பின்புறத்தில் கடந்த யூலை 31ஆம் திகதி ஒரு சடலம் கிடப்பதாக கிரம மக்கள் கண்டறிந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், அவர் யார் என்று கண்டறிய பெரும் சிரமமாக இருந்துள்ளது. இந்நிலையில், விமான நிலையத்தின் அருகில் சடலமாக மீட்கப்பட்டதால் அவர் நிச்சயம் வெளிமாநிலத்தரவராக இருக்கலாம் என்று கொல்கத்தா, டெல்லி போன்ற முக்கிய நகரங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் கொல்கத்தாவை சேர்ந்த பூஜாசிங் என்ற தகவல் பொலிசாருக்கு தெரிய வந்துள்ளது. ஆனால், அவர் எதற்காக கொல்லப்பட்டார் என்ற தகவல் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட பொலிசார், அவர் பயண விவரங்களை பெற்று, அதன் மூலம் விசார்க்க தொடங்கினர். அதில் இறுதியாக பயணம் செய்த cab சாரதியை பிடித்து விசாரித்தனர். அவர் பின் தன் குற்றத்தை ஓப்பு கொண்டு உண்மையை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியது ”பூஜா என் கேப்-ல் பயணம் செய்திருந்தார். அப்போது என்னுடைய எண் அவரிடம் இருந்தது. இதனால் 30ஆம் திகதி இரவு அழைத்து நாளை(31 ஆம் திகதி) காலை விமான நிலையம் செல்ல வேண்டும், வர முடியுமா என்று கேட்டார். நானும் ஒப்புக்கொண்டேன். பின் விமான நிலையம் செல்லும் வழியில் திசை திருப்பி வேறு இடத்திற்கு கொண்டு சென்று பணம் கேட்டு மிரட்டினேன். அவர் தர மறுத்தார். இந்நிலையில் அவரை தாக்கினேன் மயக்கம் அடைந்தார். பின் அவர் கை பையை சோதனை செய்த போது, அதில் 500ரூபாய் மட்டுமே இருந்தது. இதானல் ஆத்திரமுற்று கடுமையாக தாக்கினேன் இதில் அவர் பலியாகினார். உடலை விமான நிலையம் அருகில் கொண்டு சென்று விட்டுவிட்டு தப்பித்தேன் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்