பயணிகள் விமானத்தில் இந்தியர் செய்து வந்த மோசமான செயல்... காட்டிக் கொடுத்த கமெரா!

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவில் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட இளைஞர் ஒருவர், விமானத்தில் பறந்து சக பயணிகளிடம் திருடுவதை தொழிலாக செய்துவந்த நிலையில், பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி லாஜ்பத் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ் கபூர். இவர் தனது தந்தை செய்து வந்த ஏற்றுமதி தொழிலை செய்துவந்தார். அதன் பின்னர் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு தனது தொழிலை ராஜேஷ் கபூர் விரிவுபடுத்த முயன்றபோது, அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

இவ்வாறாக 2 ஆண்டுகளாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், தாய்லாந்தில் வசித்து வந்த ராஜேஷ் இந்தியாவுக்கு திரும்பியுள்ளார். சொகுசாக வாழ வேண்டும் என்று எண்ணிய அவர், விமானங்களில் பயணம் செய்து சக பயணிகளிடம் திருடுவது என முடிவு செய்துள்ளார்.

அதன்படி விமானங்களில் பயணம் செய்யும்போது பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்ட ராஜேஷ், கேபினில் வைக்கப்படும் luggageகளையும் தெரியாமல் திருடியுள்ளார்.

இந்நிலையில், விமானத்திற்குள் இருக்கும் கமெரா மூலம் ராஜேஷ் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து இண்டிகோ, விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்கள் ராஜேஷ் கபூரை கருப்புப் பட்டியலில் சேர்த்தது.

அதாவது அவர் தங்கள் விமானங்களில் பயணிக்க அனுமதி மறுத்தன. இந்த நிலையில் தான் தனது பெயரை சஞ்சய் குப்தா என மாற்றிக்கொண்டு, கடந்த வியாழக்கிழமை காஷ்மீருக்கு சென்றுள்ளார்.

இதுகுறித்து விஸ்தாரா விமான மேலாளர், டெல்லி விமான நிலைய பொலிசாருக்கு புகார் அளித்தார். அதன் பின்னர் உடனடியாக ராஜேஷ் கபூரை கைது செய்த பொலிசார், அவரிடம் விசாரித்தபோது ஏற்கனவே ரயில்வே நிலையங்களில் திருட்டுச் சம்பவங்களில் அவர் ஈடுபட்டதால் பல வழக்குகள் அவர் மீது இருப்பது தெரிய வந்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்