நான் எவ்வளவு சொல்லியும் கேட்கல.. கட்டாயப்படுத்தினாங்க... விமான நிலையத்தில் இளம்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

வெளிநாட்டு குடியுரிமையை கொண்ட இந்திய வம்சாவளி மாற்றுத்திறனாளி பெண் விமான நிலையத்தில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டதோடு தன் மனதை புண்படுத்தியவர்கள் எழுத்துபூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.

விராலி மோடி என்ற இளம் பெண்ணால் நடக்க முடியாது, அவர் டெல்லியில் இருந்து மும்பை செல்ல இந்திராகாந்தி விமான நிலையத்துக்கு வந்த போது பெண் காவலர் ஒருவரின் செயலால், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இது குறித்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருக்கு புகார் தெரிவித்துள்ள விராலி தனக்கு நடந்ததை டுவிட்டரில் விளக்கியுள்ளார்.

அந்த பதிவில், நான் அமெரிக்க குடியுரிமையை வைத்துள்ள இந்திய வம்சாவளி பெண்.

கடந்த 13 வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்தால் என்னால் நடக்கவோ, எழுந்து நிற்கவோ முடியாது. 09-09-19 அன்று இந்திரா காந்தி விமானநிலையத்துக்கு மும்பை செல்வதற்காக வந்தேன்.

எனது சக்கர நாற்காலியை கார்கோ கவுன்டரில் சமர்ப்பிக்க கூறினர்.

பாதுகாப்பு நடைமுறைகளுக்காகச் செல்லும்போது, பெண் பாதுகாப்பு அதிகாரியால் மோசமான அனுபவம் ஏற்பட்டது.

அவர், என்னை எழுந்து நிற்க கட்டாயப்படுத்தினார். நானும் என்னுடன் வந்தவரும் எனது நிலைமையை எடுத்துக்கூறியும் அவர் கேட்பதாக இல்லை.

அவர் உடனே, அங்கிருந்த சக காவலரிடம் இந்த பெண் தேவையே இல்லாமல் நம்மிடம் நடித்துக்கொண்டிருக்கிறாள் என்றார்.

இறுதியில், ஒரு மூத்த அதிகாரி வந்து என்னை சோதனை செய்து அனுப்பி வைத்தார்.

மாற்றுத்திறனாளிகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் எனக் காவலர்களுக்கு நீங்கள் சொல்லிக்கொடுக்க வில்லையா? இந்த அரசாங்கத்தை நினைத்து வெட்கப்படுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், டெல்லியில் இருக்கும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தன்னை தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டார்கள் என தெரிவித்தார்.

இதனிடையில் தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த அவர், அதிகாரிகள் என்னிடம் வருத்தம் தெரிவித்தது மட்டும் போதாது, இதற்கும் மேல் எதாவது செய்ய வேண்டும்.

என்னிடம் மோசமாக நடந்து கொண்டவர்களுக்கு அவர்களின் பணி தொடர்பில் சரியான பயிற்சியளிக்க வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக என்னிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers