எங்க மேல கை வைச்சு பேசாதீங்க சார்! தலைமை ஆசிரியரிடம் கெஞ்சிய மாணவிகள்.. கண்ணீர் விட்டு அழுத பரிதாபம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர் தங்கள் மீது கை வைத்து மோசமாக நடந்து கொள்வதாக மாணவிகள் கூறியுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் அருகே உள்ளது பூச்சூர் கிராமம். இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமையாசிரியர் சுப்பிரமணி (53) மீது புகார் எழுந்துள்ளது.

அதாவது பத்தாம் வகுப்பு மாணவிகளிடம் சுப்பிரமணி தகாத முறையில் நடந்து கொள்வதாக கூறப்படுகிறது.

அவர் மாணவிகளின் மேல் கை வைத்து பேசுகிறார் என்றும், கை வைக்க வேண்டாம் என்று கெஞ்சினாலும் கேட்பதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து மாணவிகள் பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ந்த பெற்றோர், பள்ளிக்கு வந்து சுப்ரமணியை எச்சரித்தும் தனது லீலைகளை அவர் தொடர்ந்துள்ளார்.

இதையடுத்து பெற்றோர்கள் பள்ளியின் முன்பு போராட்டம் நடத்திய நிலையில் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்த பொலிசார் அனைத்தையும் கேட்டறிந்தனர்.

இதை தொடர்ந்து உடனடியாக கைது செய்யப்பட்ட சுப்பிரமணியுடம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers