திருமணத்துக்காக வைத்திருந்த பணத்தை வைத்து புதுமாப்பிள்ளை செய்த நெகிழ்ச்சி செயல்.... குவியும் பாராட்டுகள்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் தனது திருமணத்துக்காக வைத்திருந்த பணத்தின் பெரும்பகுதியை பள்ளிக்கூடத்துக்கு நன்கொடையாக வழங்கிய ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மதுராந்தகத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் விக்னேஷ்வரன்.

இவருக்கு காயத்ரி என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

பொதுவாக அரசு ஊழியர்களின் திருமணம் என்றால் அதிகமாகச் செலவு செய்வார்கள் என்று பார்த்திருப்போம்.

ஆனால் விக்னேஷ்வரன் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த பெரும் பகுதி பணத்தை அதற்கு செலவு செய்யாமல் வேறு ஒரு விடயத்துக்கு செலவு செய்துள்ளார்.

அதாவது, திருமணம் என்பது ஒரு நாள் நடப்பது அதற்காக இவ்வளவு தொகையைச் செலவு செய்வது வீண் என அவர் கருதியுள்ளார்.

இதையடுத்து எவ்வளவு சிக்கனமாகத் திருமணம் செய்ய முடியுமோ அவ்வளவு சிக்கனமாகத் திருமணத்தை அவர் செய்துள்ளார்.

இதையடுத்து மீதமிருந்த ரூ40 ஆயிரம் பணத்தை தான் பணியாற்றும் அரசுப் பள்ளியில் சரியான கதவு இல்லை என்பதால் அந்த பணத்தைக் கொண்டு பள்ளிக்கு ஒரு இரும்பு கேட் அமைத்தார்.

மேலும் சேதமடைந்த பள்ளியின் சுற்றுச் சுவரை சீரமைத்தார்.

இது மட்டுமல்லாது அவர் வாழும் ஊர் வளமாக இருக்க வேண்டும் என கருதி அவர் ஒரு சமூக ஆர்வல அமைப்புடன் இணைந்து 25 ஆயிரம் விதை பந்துகளை உருவாக்கி அதை ஊரின் பல்வேறு பகுதிகளில் தூவ வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

விக்னேஷ்வரனின் இந்த மனிதநேய செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers