வாடகை வீட்டில் தனியாக வசித்த விதவை பெண்... வீட்டு உரிமையாளரால் அவருக்கு நேர்ந்த கதி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் வாடகை வீட்டில் வசித்த விதவை பெண்ணை வீட்டு உரிமையாளர் மற்றும் குடும்பத்தினர் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்தவர் மஞ்சு கோயல். விதவையான இவர் அங்குள்ள ஒரு வீட்டில் கடந்த ஆறு மாதங்களாக வாடகைக்கு வசித்து வந்தார்.

வீட்டு வேலை செய்து அதில் கிடைக்கும் வருவானத்தில் மஞ்சு தனது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வந்தார்.

இந்நிலையில் மஞ்சு வசிக்கும் வீட்டின் உரிமையாளர் சதீஷ், மஞ்சு தனது வீட்டிலிருந்து ரூபாய் மூன்று லட்சத்தை திருடியதாக குற்றஞ்சாட்டினார்.

இதையடுத்து சதீஷ் தனது மகனுடன் சேர்ந்து மஞ்சுவை சரமாரியாக தாக்கினார்.

பின்னர் மஞ்சுவின் சகோதரர் முகேஷுக்கு போன் செய்த சதீஷ், உன் சகோதரி மஞ்சு எங்கள் வீட்டில் பணத்தை திருடியதால் நாங்கள் அவரை சரமாரியாக அடித்தோம் என கூறினார்.

இதையடுத்து பதறியடித்து கொண்டு அங்கு வந்த முகேஷ் உயிருக்கு போராடி கொண்டிருந்த மஞ்சுவை மீட்டு தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் மருத்துவரை வீட்டுக்கு வரவழைத்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து முகேஷ் கூறுகையில், சதீஷ் மற்றும் அவர் மகன் மட்டுமின்றி மொத்த குடும்பமும் சேர்ந்து மஞ்சுவை அடித்து கொன்றுள்ளனர்.

மேலும் அவரிடம் இருந்த ரூ 60,000-தையும் பிடுங்கி கொண்டுள்ளனர் என கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் சதீஷ் மற்றும் அவர் மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers