இலங்கையில் இருந்து வருகிறார்.... நான் உடன் இருக்க வேண்டும்: நளினி மீண்டும் மனு

Report Print Santhan in இந்தியா

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி மீண்டும் பரோல் கேட்டு மனு கொடுத்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் முருகனும், அவரது மனைவி அங்கிருக்கும் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.

25 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் இவர்களுக்கு விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகிறது.

இந்நிலையில் நளினி கடந்த ஜுலை மாதம் 25-ஆம் திகதி பரோலில் வெளிவந்தார். அப்போது அவர் லண்டனில் இருக்கும் தன் மகளின் திருமணத்திற்காக பரோல் கேட்டிருந்தார்.

அதன் பின் 51 நாட்களுக்கு பிறகு, செப்டம்பர் 15-ஆம் திகதி நளின் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். மகளின் திருமணத்திற்காக வெளியில் வந்தவர், கடைசி வரை மகளின் திருமணத்தை நடத்தி வைக்க முடியமால் மீண்டும் சிறைக்குள் சென்றுவிட்டார் என்று செய்தி எல்லாம் வெளியாகின.

இந்நிலையில் நளின் தற்போது மீண்டும் ஒரு மாதம் பரோல் கேட்டு வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதியிடம் நேற்று மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், இலங்கையில் உள்ள முருகனின் தந்தை உடல்நல குறைவாக உள்ளார். அவர் சிகிச்சை பெறுவதற்காக தமிழகத்திற்கு விரைவில் வர உள்ளார். அவர் சிகிச்சை பெறும் காலத்தில் அவருடன் துணையாக இருக்க ஒரு மாதம் பரோல் கேட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்