ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று சென்றுள்ள நிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வரிடம் விளக்கம் கேட்டு ட்வீட் செய்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 தமிழர்கள் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இவர்களை விடுவிக்கக் கோரி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, உடனடியாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பப்பட்டது.
ஆனால், அவர் ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில், அவர்களை விடுதலை செய்ய முடியாது என தமிழக முதல்வரிடம் ஆளுநர் கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
"பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது" என தமிழக ஆளுநர், முதலமைச்சரிடம் தெரிவித்து விட்டதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து முதல்வர் அவர்கள், தமிழக மக்களுக்கு உடனே விளக்கம் தந்திட வேண்டும் https://t.co/6pjC8oSIs1
— M.K.Stalin (@mkstalin) October 18, 2019
இதற்கிடையில், சிறை தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரில் ஒருவரான ரவிச்சந்திரன், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்நிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
‘பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழக ஆளுநர், முதலமைச்சரிடம் தெரிவித்துவிட்டதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து, முதல்வர் அவர்கள் தமிழக மக்களுக்கு உடனே விளக்கம் தந்திட வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.