பொலிஸ் அதிகாரி மீது கார் ஏற்றி கொன்ற எஸ்ஆர்எம் கல்லூரி மாணவன்..சென்னையில் பயங்கரம்!

Report Print Basu in இந்தியா

சென்னையில் எஸ்ஆர்எம் கல்லூரி மாணவன் தலைமை காவலர் மீது கார் ஏற்றி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜிஎஸ்டி சாலையில் நள்ளிரவு 12:30 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது. கொல்லப்பட்ட காவலர் சேலத்தைச் சேர்ந்த வி.பி.ரமேஷ் என தெரியவந்துள்ளது. அன்று அவருக்கு பிறந்தநாள் என்பது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்துள்ள சேலையூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் ராமேஷ், மனைவி சுமதி மற்றும் மகள்கள் காயத்ரி, மோனஷா, கீர்த்தனா என குடும்பத்துடன் குரோம்பேட்டையில் வசித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு பணி முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த ரமேஷ், தாம்பரத்தில் உள்ள பங்க்கில் பெட்ரோல் போட்டு வெளியே வரும் போது மின்னல் வேகத்தில் வந்த கார், அவர் பைக் மீது மோதியுள்ளது.

இதில் தூக்கி வீசப்பட்ட காவலர் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார். காரை ஓட்டி வந்த 20 வயதுடைய ஆதித்யாவை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அதித்யாவும், கல்லூயில் உடன் படிக்கும் மற்றொரு மாணவனும் கார் பந்தயத்தில் ஈடுபட்டதாகவும், இதன் போதே விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்