‘கோத்தபய ராஜபக்சவுக்கு வாக்களிக்காத இலங்கை தமிழர்களுக்கு நன்றி!’- வைகோ

Report Print Abisha in இந்தியா

இலங்கை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழர்களுக்கு நன்றி கூறுவதாக மதிமுக பொதுச்செயலாளர், வைகோ பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கோத்தபய ராஜபக்சவுக்கு வாக்களிக்காத இலங்கை தமிழர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்த அனைத்து தமிழர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று வைகோ கூறினார்.

மேலும், கோத்தபய ராஜபக்ச வெற்றிபெற்ற இந்த நாள் இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் என்றும் கூறினார்.

எதிர்காலத்தில், இந்திய அரசு தமிழர்களை காக்கும் செயலில் ஈடுபட வேண்டும். கோத்தபய நிச்சயம், தமிழினத்தை அழிக்க துடித்து கொண்டே இருப்பார். தமிழர்களை பாதுகாக்கும் கடமை தாய் தமிழகத்தில் இருக்கும் தமிழர்களுக்கு உண்டு, என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Party wise Results