மனைவி கொடுத்த மோர்... ஆசையாக பருகிய புதுமாப்பிள்ளை: அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Vijay Amburore in இந்தியா

மனைவி கொடுத்த மோரை பருகியதும் புதுமாப்பிள்ளை மயக்கமடைந்து தரையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த லிங்காமையா (25) கடந்த 9 நாட்களுக்கு முன்பு மதானந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த 20 வயது நாகமணியை திருமணம் செய்துள்ளார்.

திங்கள்கிழமை காலை, லிங்காமையா மனைவியை தனது கிராமத்திற்கு அழைத்துச் செல்ல மாமியார் வீட்டிற்கு சென்றிருந்துள்ளார்.

அப்போது மனைவி மோர் கொண்டுவந்து கணவனுக்கு கொடுத்துள்ளார். மோர் துர்நாற்றம் வீசுகிறது என்று முதலில் கூறிய லிங்காமையா, புளித்திருக்கும் அதனால் அப்படி வாசனை வரலாம் என நினைத்துக்கொண்டே குடித்துள்ளார்.

அடுத்த சில நிமிடங்களில் அவர் மயக்கமடைந்து தரையில் விழுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சைக்கு பின் அவர் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் கூறியுள்ளது. இதற்கிடையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், விஷம் வைக்கப்பட்டதில் நாகமணியின் பங்கு ஏதேனும் இருக்கிறதா? அவருடைய சம்மதத்துடன் தான் திருமணம் நடைபெற்றதா என்கிற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்