வெளிநாட்டிற்கு செல்லவிருந்த பயணியை சோதித்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி! வசமாக சிக்கிய காட்சி

Report Print Santhan in இந்தியா

டெல்லி விமான நிலையத்தில் பயணி ஒருவரின் பையில் இருந்த பிஸ்கட் மற்றும் கடலை போன்றவைகளை அதிகாரிகள் சோதனை செய்த போது, அதன் உள்ளே சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணங்களை மறைத்து வைத்திருந்தைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உலகில் பல்வேறு முறைகளில் கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக விலங்குகள், வெளிநாட்டு பணம், நகைகள் மற்றும் தங்கம் போன்றவைகளை நம்பமுடியாத அளவிற்கு மறைத்து வைத்து கடத்தல் கும்பல் கடத்திவிடுகிறது.

இதன் காரணமாக விமான நிலையங்களில், அதிகாரிகள் பயணிகளிடம் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இருக்கும் Indira Gandhi சர்வதேச விமானநிலையத்தில் நேற்று துபாய்க்கு சுற்றுலா விசா மூலம் செல்லவிருந்த Murad Alam-ன் பையை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அவருடைய பையில் இருந்த கடலையை அதிகாரிகள் உடைத்து பார்த்த போது, உள்ளே வெளிநாட்டு பணங்கள் சுருட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் உள்ளே இருந்த பிஸ்கட் பாக்கெட்டுகளை உடைத்து பார்த்த போது, அதன் உள்ளேயும் வெளிநாட்டு பணங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அதிகாரிகள் முழுவதும் அவருடைய பையை சோதனை செய்த போது, சுமார் இந்திய மதிப்பில் 45 லட்சம் ரூபாய் வெளிநாட்டு பணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

அந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி வைரலாகி வரும் நிலையில், குறித்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்