தமிழகம் வந்த அமெரிக்கருக்கு நடந்த கொடூரம்! ஆள் அரவமற்ற இடத்துக்கு சென்ற போது நடந்தது என்ன? திடுக்கிடும் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

முக்தியடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழகம் வந்த அமெரிக்கர் எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஜான் ராபர்ட்ஸ் என்பவருக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இருந்துள்ளது.

ஆன்மிகத்தை முழுமையாக உள்வாங்கி, முக்தியடைய வேண்டும் என்ற நோக்கில் 2009ஆம் ஆண்டு தமிழகம் வந்த ஜான் ராபர்ட்ஸ், திருவண்ணாமலையில் தங்கியிருந்தார்.

இந்து மதத்தை முழுமையாகத் தழுவிய ஜான் ராபர்ட்ஸ், சிவன் அடியாராகவே மாறிவிட்டார். 6 மாதம் அமெரிக்காவிலும், 6 மாதம் இந்தியாவிலும் வசித்துவந்த ஜான் ராபர்ட்ஸ். திருவண்ணாமலையில் உள்ள பின்கார்ப் நிதி நிறுவனத்தில் கணக்கு தொடங்கியுள்ளார்.

அந்த நிதிநிறுவனத்தின் பணியாளர் விக்னேஷ் என்பவருக்கும், ஜான் ராபர்ட்ஸுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்ட நிலையில், தன் தந்தைக்கு இதய அறுவைச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று 20 லட்சம் ரூபாயை ஜானிடமிருந்து விக்னேஷ் கடனாகப் பெற்றதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா சென்ற பிறகு விக்னேஷை தொடர்பு கொண்டதில், 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் உங்களின் கடனைத் திருப்பித்தருகிறேன் என்று விக்னேஷ் கூறியுள்ளார்.

2019ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் திகதி திருவண்ணாமலைக்கு வந்த ஜான், விக்னேஷை தொடர்புகொண்டுள்ளார். காஞ்சிபுரத்திற்கு வா பணம் வைத்துள்ளேன் என்று அவரை வரவழைத்துள்ளார் விக்னேஷ்.

இதையடுத்து ஜானை ஜீப்பில் ஏற்றிக்கொண்ட விக்னேஷ், சென்னையில் நண்பரிடம் பணம் இருப்பதாக அழைத்துச் சென்றுள்ளார். விக்னேஷை முழுமையாக நம்பிய ஜான், ஜீப்பில் சென்றுள்ளார்.

ஆள்அரவமற்ற ஓர் இடத்தில் ஜீப்பை நிறுத்திய விக்னேஷ், திடீரென நைலான் கயிற்றால், ஜான் ராபர்ட்ஸுன் கழுத்தை நெறுக்கி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், தான் கொண்டுவந்திருந்த பெட்ரோலை அவரது உடல்மேல் ஊற்றி, கட்டைகளை அடுக்கி, உடலை எரித்துள்ளார். குற்றத்தை அரங்கேற்றிவிட்டு, விக்னேஷ் துபாய்க்குச் சென்று தலைமறைவானதாகவும், ஒரு மாதத்திற்குப் பிறகு தமிழகம் திரும்பியபோது கைது செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

ஜான் ராபர்ட்ஸ் கொலை செய்யப்பட்டு 8 மாதங்கள் ஆன நிலையில், இதுவரை இந்த வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.

இந்த நிலையில், தனது சகோதரர் கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என ஜான் ராபர்ட்ஸுன் சகோதரி ஜீன் ராபர்ட்ஸ் நீதிமன்றத்தை அணுகினார்.

ஜுன் ராபர்ட்ஸுன் மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை முழுமையாக தாங்களே கண்காணிப்பதாகவும், அறிக்கை தாக்கல் செய்யவும் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்