அடங்கி வீட்டில் இருங்கள்... இல்லையென்றால் சுட்டுத் தள்ளுவோம்! தெலுங்கானா அரசு எச்சரிக்கை

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறி, சாலையில் சுற்றித் திரிபவர்களை சுட்டுத் தள்ள இராணுவத்தை அழைக்கப்போவதாக, தெலுங்கானா முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் இப்போது இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. தற்போது வரை இந்தியாவில் இந்த நோயால் 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

நோயின் தீவிரத்தை மக்கள் உணராத காரணத்தினால், நேற்று நள்ளிரவு முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்தார்.

அதன் படி மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தெலுங்கான முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் எந்தவித கட்டுப்பாட்டையும் மதிக்காமல் சாலையில் சுற்றுபவர்களை சுட்டுத் தள்ள ராணுவத்தை அழைக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தீவிரம் புரியாமல் பலர் வழக்கம் போல் சாலைகளில் நடமாடுவதுடன், வாகனங்களில் ஊர்சுற்றுகின்றனர்.

இதையடுத்து காவல்துறை கடுமையாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ள சந்திரசேகர ராவ், அவசியமானால் ராணுவத்தை அழைப்பதாக எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...