இந்தியாவில் ஊரடங்கை மீறிய பெண்ணை பொலிசார் சாலையில் மடக்கியதற்காக தனது பழைய காயத்தை கடித்து அதில் வந்த இரத்தத்தை அப்பெண் காவல் அதிகாரியின் சட்டையில் பூசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தாலி, ஸ்பெயின், தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாகவே உள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 606 ஆக உயர்ந்து விட்டது. பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் முதல் இரவு 12 மணி முதல், 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
WTF this DESPICABLE Woke #COVIDIOT when stopped by police abused & spit on Kolkata Police Cop 😠😡 #COVIDIDIOTS #COVIDIOTS #coronavirusindia #21daylockdown pic.twitter.com/Q1P8RcVtZw
— Rosy (@rose_k01) March 25, 2020
இதனால் அத்தியாவசிய பணிகள் தவிர்த்து மற்றவர்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என மத்திய - மாநில அரசுகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த இரு தினங்களுக்கு முன் கொரோனா பாதித்த முதியவர் ஒருவர் பலியானார்.
இதையடுத்து அங்கு கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்தன. ஒரு காரில் பெண் ஒருவர் நேற்று மதியம் 12.30 மணிக்கு தனது நண்பர் ஒருவருடன் பேலிகுஞ்ஜேவிலிருந்து சால்ட் லேக் பகுதிக்கு வந்து கொண்டிருந்தார்.
அவரை பொலிசார் கைகாட்டி நிறுத்தி எங்கே போகிறீர்கள் என கேட்டனர்.
அதற்கு மருந்து வாங்க செல்வதாக அப்பெண் கூறிய நிலையில் மருத்துவர் எழுதி கொடுத்த மருந்து சீட்டை கொடுங்கள் என கேட்ட போது அதை அவர்கள் காட்டவில்லை.
இதனால் அவர்களை பொலிசார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து கோபமான அப்பெண் பொலிசாரை திட்டி தீர்த்தார்.
பின்னர் தனது பழைய காயத்தை கடித்து இரத்தம் வரவழைத்து அந்த ரத்தத்தை வெள்ளை சீருடை போட்டிருந்த அந்த பொலிஸ் அதிகாரி மீது பூசினார். என்னை பிடித்து தள்ளியதாகவும், என்னை காயப்படுத்தியதாகவும் பொய்யான புகாரை உங்கள் மீது கொடுப்பேன் என மிரட்டினார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.