பிள்ளைகளை கணவரிடம் விட்டு வேலைக்கு சென்ற மனைவி! வீடு திரும்பிய போது மூத்த மகள் நிலையை கண்டு ஏற்பட்ட அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் வடமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (37) கூலி தொழிலாளி. இவர் சாமியாடியாகவும் இருந்தார்.

இவரது மனைவி கோவிந்தம்மாள் (32) இவர்களுக்கு, ராஜேஸ்வரி (12) ஷாலினி (10) சேதுராமன் (8) என மூன்று பிள்ளைகள்.

நேற்று காலை, கோவிந்தம்மாளுக்கும், ஆறுமுகத்திற்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கோவிந்தம்மாள், பிள்ளைகளை கணவரிடம் விட்டு தனியார் தொழிற்சாலைக்கு துப்புரவு பணிக்கு சென்றுவிட்டார்.

பணி முடித்து மாலை வீட்டிற்கு வந்தபோது, மூத்த மகள் ராஜேஸ்வரி மயங்கி கிடந்தார். மகளை எழுப்ப முயற்சித்தபோது இறந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

கணவர் மற்றும் இரு குழந்தைகள் வீட்டில் இல்லாததால் பீதியடைந்த கோவிந்தம்மாள் அருகாமை வீட்டாருடன், அவர்களை தேடிய நிலையில் பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், வடமங்கலம் பகுதியில் விவசாய கிணற்றின் அருகே உள்ள மரத்தில் ஆறுமுகம் துாக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.

தகவலறிந்து சென்ற பொலிசார் குழந்தைகளை காணாததால், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் கிணற்றில் இறங்கி தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் ஷாலினி மற்றும் சேதுராமன் உடல்களை மீட்டபோது, இருவரும் ஒரே கல்லில் கயிறால் கட்டப்பட்டது தெரிந்தது.

இதையடுத்து பொலிசார் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், ஆறுமுகம், கூலி வேலை செய்தது மட்டுமின்றி, சாமியாடி குறி சொல்பவராகவும் இருந்துள்ளார். நேற்று காலை, தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் கோவிந்தம்மாள் வீட்டில் இருந்து வெளியேறி வேலைக்கு சென்றுள்ளார்.

ஆனால், மனைவி கோபித்து தன்னை விட்டு எங்கோ சென்று விட்டார் என நினைத்து குழந்தைகளை கொலை செய்து ஆறுமுகம் தற்கொலை செய்திருக்கலாம்.அல்லது, சாமியாடி என்பதால், குழந்தைகளை நரபலி கொடுத்தாரா அல்லது வேறு காரணமா என விசாரித்து வருகிறோம். என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்