நடுரோட்டில் முதியவர் மீது பொலிசார் தாக்குதல்: எதற்காக அடித்தேன் தெரியுமா?

Report Print Fathima Fathima in இந்தியா

சாத்தான்குளம் சம்பவத்துக்கு பின்னர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான கண்டனங்கள் வலுத்துள்ளன.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவருக்கும் நீதி கிடைக்கும் வேண்டுமென குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி விட்டன.

இந்நிலையில் நேற்று நடுரோட்டில் வைத்து சைக்கிளில் வரும் முதியவரை பொலிசார் தாக்குவது போன்ற காட்சிகள் வைரலாகின.

அதாவது திருச்சி எம்.ஜி.ஆர் சிலை ரவுண்டானா அருகே நேற்று பொலிசாரின் டூவீலரும், சைக்கிளும் மோதிக்கொண்டன.

அப்போது நடைபெற்ற வாக்குவாதத்தின் போது சைக்கிளில் வந்த முதியவரைச் சீருடையில் இருந்த தலைமைக் காவலர் அடித்துவிட்டு சென்றார்.

இந்த வீடியோ வைரலாகவே உடனடியாக விசாரணை நடத்தும்படி காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

இதன்படி சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்ததில், குறித்த காவலர் உறையூர் சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த இளங்கோ என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியதில், அந்த முதியவர் குடிபோதையில் இருந்ததாக கூறியுள்ளார்.

மேலும் ஏற்கனவே இரண்டு பேர கொன்னுட்டீங்க, இன்னும் யாரெல்லாம் கொல்லப் போறீங்களோ என கூறியதுடன், தன் அம்மாவை பற்றி ஒருமுறையில் பேசியதால் கோபத்தில் அடித்ததாக தெரிவித்துள்ளார்.

எனினும் சீருடை அணிந்து கொண்டு பொது இடத்தில் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறி இளங்கோவனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்