வெளிநாட்டில் லட்சக்கணக்கில் சம்பளம்... வேலையை உதறிவிட்டு வந்த இளைஞர்: யாருக்காக தெரியுமா?

Report Print Fathima Fathima in இந்தியா
627Shares

வெளிநாட்டில் கைநிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் யானைக்காக மீண்டும் தாய்நாடு திரும்பிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கும்பகோணத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகன் கோவிந்தராஜூ பொறியியல் படித்தவர். கோவிந்தராஜூவின் குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக வீட்டில் யானை வளர்த்து வருகின்றனர்.

தற்போது, கோவிந்தராஜூ வீட்டில் ஷியாமளா என்ற யானை வளர்ந்து வருகிறது. கடந்த 2003 - ஆம் ஆண்டிலிருந்து இந்த யானை கோவிந்தராஜ் வீட்டில் செல்லப்பிள்ளை போல வாழ்கிறது.

சிறு வயதிலிருந்தே பள்ளி செல்லும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் யானையுடனே இருந்துள்ளார் கோவிந்தராஜூ, யானைக்கு தேவையான அனைத்தையும் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் படித்து முடித்ததும் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா விமான நிலையத்தில் வேலை கிடைத்தது.

அங்கு கோவிந்தராஜூ சென்றதும், ஷியாமளாவின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்துள்ளது, சரியாக சாப்பிடாமல் அமைதியாகவே ஒருவித சோகத்துடன் இருந்துள்ளது.

இத்தகவல் கோவிந்தராஜூ வுக்கு தெரியவந்ததும் யானையின் மீதான பாசத்தால், வேலையை உதறிவிட்டு கடந்தாண்டே தாய்நாடு திரும்பி விட்டார்.

கோவிந்தராஜூவை பார்த்ததும் உற்சாகமடைந்த ஷியாமளா பழைய நிலைக்கு திரும்பிவிட்டதாம்.

தற்போது, 49 வயதான ஷியாமளாவை காவிரி ஆறும், அரசலாறும் சேரும் இடத்தில் காடு போன்ற சூழலில் வைத்து கோவிந்தராஜூ வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்