2 குழந்தைகளுக்கு எலி மருந்தை கொடுத்துவிட்டு தந்தை தற்கொலை! வீட்டில் இருக்கும் மனைவிக்கும் கொண்டு வந்த துயரம்

Report Print Santhan in இந்தியா
865Shares

தமிழகத்தில் 2 மகன்களுக்கு எலி மருந்து கொடுத்துவிட்டு, தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (58). இவர் சென்னை, ஊரப்பாக்கம் அடுத்த காரணைபுதுச்சேரி கோகுலம் காலனி அர்ஜுன் தெருவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாடகை வீட்டில் குடியேறினார்.

அதன் பின் அப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இவருக்கு சுமதி(45) என்ற மனைவியும், சிவக்குமார்(10) மற்றும் சரண்குமார்(8) என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இரண்டு மகன்களும் மூளை வளர்ச்சி குறைவானவர்கள் என்பதால், டீக்கடையை மூடிவிட்டு சந்தோஷ்குமார் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

ஆனால், தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டதால், சந்தோஷ்குமாரால் சரிவர குடும்பத்தை நடத்த முடியவில்லை.

குடும்பம் நடத்த முடியாமல் கடும் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சந்தோஷ்குமாரிடம், உணவு பொருட்கள் கேட்டு, பிள்ளைகள் அடம்பிடித்துள்ளனர்.

ஆனால், மகன்களுக்கு எதுவும் வாங்கி கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டுள்ளார். இதனால், மனமுடைந்த அவர், மாலையில் கடைக்கு சென்று எலி மருந்து வாங்கி வந்து, தனது 2 பிள்ளைகளையும் அருகில் உள்ள ஏரிக்கரைக்கு அழைத்து சென்று, 3 பேரும் சேர்ந்து எலி மருந்தை குடித்தனர்.

அதன் பின் சிறிது நேரம் கழித்து வீடு திரும்பியுள்ளனர். வீடு திரும்பிய அவர் அவரது மனைவி சுமதிக்கும் மருந்தை கொடுத்து குடிக்கும் படி கூறியுள்ளார்.

ஆனால் சுமதி மறுத்துள்ளார். இதைத் தொடர்ந்து கணவன் மற்றும் 2 மகன்கள் மயங்கி கீழே விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த சுமதி, அலறியுள்ளார்.

அவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சந்தோஷ்குமார், நேற்று முன்தினம் இரவு இறந்தார். மேல் சிகிச்சைக்காக 2 சிறுவர்களும், சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கூடுவாஞ்சேரி பொலிசார் வழக்குப்பதிவு செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்