இலங்கை தாதா உயிரிழந்த சம்பவத்தில் யாரும் எதிர்பார்க்காத திருப்பம்! ஆய்வக பரிசோதனையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை

Report Print Raju Raju in இந்தியா

இலங்கை தாதா அங்கொட லொக்கா மரணத்தில் அதிரடி திருப்பமாக அவர் இயற்கையாக இறந்துள்ளார் என சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவகாமி சுந்தரி, (36). இவர் கோவை சேரன் மாநகர் கிரீன் கார்டன் பகுதியில் தங்கியிருந்த தனது உறவினர் பிரதிப்சிங் (35) என்பவர் உயிரிழந்து விட்டார் என, பீளமேடு பொலிசாரிடம் புகார் செய்தார்.

இதற்காக அவர் பிரதாப்சிங்கின் அடையாள சான்றாக ஆதார் அட்டையை வழங்கினார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த பொலிசார் பிரேதப்பரிசோதனைக்கு பின் சடலத்தை ஒப்படைத்தனர். சிவகாமி சுந்தரி மற்றும் உயிரிழந்தவருடன் தங்கியிருந்த இலங்கை கொழும்பை சேர்ந்த அமானி தான்ஜி, (27) இருவரும் சடலத்தை மதுரைக்கு எடுத்துச் சென்று எரித்துள்ளனர்.

இந்நிலையில், இவ்வழக்கு குறித்து சந்தேகமடைந்த பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உயிரிழந்தவரின் உண்மையான பெயர், அங்கொட லொக்கா எனத் தெரிந்தது. இவர், இலங்கையில் போதைப் பொருள் கடத்தும் நிழல் உலக கும்பலைச் சேர்ந்தவர், பல கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.

கோவை சேரன் மாநகரில் வீடு எடுத்து, தனது காதலி அமானி தான்ஜி உடன் தங்கியுள்ளார். மேலும், அங்கொட லொக்கா மற்றும் அமானி தான்ஜி ஆகியோரின் உண்மையான பெயர் மற்றும் குடியுரிமையை மறைத்து, ஆதார் அட்டை பெற போலி ஆவணங்களை வழங்கியுள்ளதும் தெரியவந்தது.

மேலும் அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக அப்போது தகவல் வெளியானது.

இந்த நிலையில் இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக அங்கொட லொக்கா உடலில் விஷம் இல்லை என தெரியவந்துள்ளது.

அதாவது கோவையில் இறந்த இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் மரணம் இயற்கையானதே என்று சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.

சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி., சங்கர் கூறுகையில்,ஆய்வக முடிவுகள் கிடைத்துள்ளன. இதன்படி, அவருக்கு விஷம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்பது தெரிந்துள்ளது.

எனவே, அவரது இறப்பு மாரடைப்பால் ஏற்பட்டு இருக்கலாம். மற்றபடி, அவரது டி.என்.ஏ., முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை. டி.என்.ஏ., முடிவுகள் கிடைத்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்