ஊர் முழுவதும் தனக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ந்த பெண்! வைரலாகும் போஸ்டர்

Report Print Basu in இந்தியா

தமிழகத்தில் உயிருடன் இருக்கும் பெண்ணிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. 24 வயதான ரோஷினி என்ற பெண்ணிற்கு இவ்வாறு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

கடந்த 2018ல் ரோஷினி-வீரராகவனுக்கு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த மார்ச் மாதம் வீரராகவன் தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் ரோஷினி தனது தாய் வீட்டுக்கு வந்து விட்ட நலையில் இரு குடும்பத்துக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி ரோஷினி வசிக்கும் பகுதிகளில் அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததுள்ளது. இதைப்பார்த்த ரோஷினி மற்றும் அவரதுகுடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, வீரராகவன் தந்தை ரெங்கராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் போஸ்டர் ஒட்டியிருக்கலாம், இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரோஷினியின் தந்தை செல்வராஜ் பெரம்பலூர் பொலிசில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்